Skip to content

கும்பாபிஷேகம்…கோவையில் 18 கிராம மக்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு

கோவை தொண்டாமுத்தூர் அருள்மிகு மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வரும் ஞாயிறன்று அன்று நடைப்பெற உள்ளது. இவ்விழா வின் துவக்கமாக யாகசாலைகள் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று கும்பாபிஷேக பணிகள்‌ மிக வேகமாக நடைப்பெற்று வருகிறது.‌ விழாவிற்கு பேரூராதீனம் சாந்தலகங்க மருதாசல அடிகளார் , கெளமார மரபு தண்டபாணி சுவாமி இராமானந்த குமரகுருபர சுவாமிகள் , ஸ்ரீ லட்சுமி நரசிங்க பீடம் மடாதிபதி அனந்தாழ்வான் சுவாமிகள் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் அமைச்சர் பி.கே.சேகர் பாபு , கோவை மாவட்ட ஆட்சியர், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி உள்ளிட்டவர்கள் தலைமையில் கும்பாபிஷேக விழா நடைப்பெற உள்ளது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியின் துவக்கமாக நேற்று திருவிளக்கு வழிபாடு , புனித நீர் வழிபாடு மூத்த பிள்ளையார் வழிபாடு, ஐம்பூதப் பெருமாள் வழிபாடு, வேள்வி வழிபாடு, பூசணிக்காய் பலியிடுதல் வைக்கோல் பொம்மை எரித்தல் நடைப்பெறும்.‌ இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான இன்று தாரை தப்பட்டை, தஞ்சை கரகாட்ட, ஜண்டை,பம்பை ,உடுக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க வாழ வேடிக்கைகளுடன் மேல் சித்திரை சாவடி வாய்க்கால் கரையில் இருந்து தேர் வீதி வழியாக புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் திருக்கோவிலுக்கு எடுத்து

வருதல். காலை 9 மணி முதல் 12 மணிக்குள் காப்பு கட்டுதல் புற்று மண் வழிபாடு நிகழ்ச்சி நடைபெறும். 12 மணியிலிருந்து மூன்று மணிக்குள் சுற்றுவட்டார கிராம மகளிர் முளைப்பாலிகை எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு முதல் கால வேள்வி வழிபாடு, திருமஞ்சனாகுதி,108 மூலிகை திரவியாகுதி வேள்வி நிறைவு மலர் வழிபாடு திருமுறை விண்ணப்பம் நடைப்பெற்று , அருட் பிரசாதங்கள் வழங்குதல்

நாளை காலை ஆறு மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மங்கல இசை நடைபெறும். எட்டு மணிக்கு திருக்குறிப்புத்திருமஞ்சனம் ,10.30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி வழிபாடு, காலை 11 மணிக்கு புற்று மண் எடுத்து வேள்விச் சாலையில் முளைப்பாலிகை வழிபாடு, காப்பணிவித்தல் , சயனாதிவாசம் நடைபெறும். மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வ வழிபாடு நடைபெறும். இறை திருமேனிகளை பீடத்தில் வைத்து எண் வகை மருந்து சாத்துதல் நடைப்பெறும்.

விழாவை தொடர்ந்து முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நடைபெறும் 18 ஆம தேதி அன்று காலை 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி , மங்கல இசை, ஆனைந்தாட்டிக் காப்புக் கட்டுதல், 5.30 மணிக்கு நான்காம் கால வேள்வி வழிபாடு நடைப்பெறும்.

காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் திருமண நன்னீராட்டு திருவிழா நடைபெறும். தொடர்ந்து திருமஞ்சனம், பதின்மங்கலக்காட்சி , அலங்கார பூஜை தொடர்ந்து பக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் மகா அன்னதானம் நடைபெறும்.‌

காலை 11:30 மணி முதல் 5 30 மணி வரை முடித்து வட்டார கிராம மக்களின் தாரை தப்பட்டை நிகழ்ச்சி நடைபெறும். மாலை 6 மணி முதல் எட்டு முப்பது மணி வரை மேள வாத்தியங்கள் வான வேடிக்கையுடன் குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறும்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கே.கே.கதிரவன், ஊர் தலைவர் ராமச்சந்திரன், அறங்காவலர்கள் கே.லட்சுமி, கே. சின்னத்தம்பி, கே.சசிக்குமார், ஏ.மூர்த்தி மற்றும் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் குமதவள்ளி , ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!