Skip to content

திருச்சி அருகே முனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு மகா மாரியம்மன் வழி விடு விநாயகர் எல்லை முனியாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சிலோன் காலிணியில் மகா மாரியம்மன் வழி விடு விநாயகர் எல்லை முனியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அப்பகுதி மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இந்த நிலையில் அந்த கோவிலில் கும்பாபிஷேக விழா

விமர்சையாக நடந்தது.

முன்னதாக கடந்த 20 ஆம் தேதி கணபதி ஹோமம் தொடங்கியது. அன்று போலீஸ்காரனின் ஞான விநாயகர் ஆலயத்தில் இருந்து தீர்த்த நீர் எடுத்து வரப்பட்டது.

அதன் பிறகு காலை மாலை என இருவேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நேற்று காலை மேளதாளங்கள் முழங்க மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மிக விமர்சையாக நடந்தது.

இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

error: Content is protected !!