திருப்பத்தூர் மாவட்டம், ஆத்தூர்குப்பம் ஊராட்சி பண்ணான்டகுப்பம் கொல்லகொட்டாய் பகுதியில் புதிதாக ஆலயம் புனரமைக்கப்பட்டு முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவில் சாமிக்கு கொடியேற்றுதல் தொடங்கி காப்புகட்டுதல் முளைப்பாரி கொண்டு வருதல் ஆலயத்தில் உள்ள பல்வேறு பிரகார தெய்வங்களுக்கு பூஜைகள் நிறைவேற்றி யாகசாலை பிரவேசம் தொடங்கி மகாபூர்ணாஹீதி தொடங்கி கலச புறப்பாடு செய்து ஆலயத்தில் மேல் உள்ள அம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு ஆலயத்தில் உள்ள மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது ஆலயத்தில் சுற்றி இருந்த
பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்று சென்றனர் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டன முன்னாள் மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சகாதேவன் தலைமையில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து அன்பளிப்பு அளித்த பக்தர்களும் கலந்து கொண்டனர் விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் தொழிலதிபர் குருசேவ் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்று சென்றனர்