Skip to content

குளித்தலை அருகே ஸ்ரீ காடை பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் எழுந்தருளி உள்ள காடைப்பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக நேற்று காவேரி நதிக்கரையில் இருந்து தீர்த்த குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது

முக்கிய வீதி வழியாக மேளதாளங்கள் முழங்க 50 க்கு மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்துச் சென்று கோவிலுக்கு வந்தடைந்தனர் பின்னர் யாக வேள்வி பூஜை இரண்டு கால பூஜை நடைபெற்றது. இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவிலின் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது பின்னர் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. சத்தியமங்கலத்தை சேர்ந்த சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழா ஏற்பாடு ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர்.

error: Content is protected !!