கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல கம்பேஸ்வரத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை குளித்தலை காவேரி ஆற்றில் இருந்து மேல தாளங்களுடன் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 3ம் தேதி விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தியுடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது அதை தொடர்ந்து தீபாராதனைகளும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை மங்கல இசை உடன் இரண்டாவது யாகசாலை பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கடம் புறப்பாடு விமான கோபுரம்
கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தகோடிகள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் மேல கம்பேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ மகா மாரியம்மன் தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.