தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் வேளாண்துறை பொதுப்பணித்துறை மின்சாரத்துறை மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஆனால் இதுவரை மாவட்டத்தில் பல விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்படவில்லை, எனவே உடனடியாக அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும். தற்போது இலக்கை மிஞ்சி சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், அறுவடை செய்யும் வேண்டிய காலத்தில் மழை பெய்யும் என்பதால் கூடுதல் உலர் இயந்திரங்கள் கொண்டு வர வேண்டும், இதேபோல் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கு வேளாண்மை துறை சார்பில் நடத்தப்பட்ட தானிய பயிர்கள் உற்பத்தியில் தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதற்கான சான்றிதழ்களை விவசாயிகளிடம் காண்பித்து விவசாயிகளை மாவட்ட ஆட்சியர் வெகுவாக பாராட்டினார்.