தஞ்சை, கபிஸ்தலம் அருகே உள்ள நாயக்கர் பேட்டை கீழே தெருவில் வசிப்பவர் கந்தசாமி மகன் பாலசுப்பிரமணியன் (55), விவசாயக் கூலி தொழிலாளி. இவர் கடந்த 11ம் தேதி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி ரேவதி கண்டித்து வீட்டிற்கு பணம் கொடுக்காமல் இப்படி குடித்து விட்டு வருகிறாயே என்று தனது கணவரை திட்டி உள்ளார்.
இதனால் மனமுடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த விஷப்பூச்சி மருந்தை குடித்துவிட்டார். உடனடியாக சிகிச்சைக்காக அவரை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலசுப்ரமணியன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி ரேவதி கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகிறார்.