Skip to content

நாட்றம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி…

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் ஆனந்தன் என்பவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். அவரது பட்டறையில் கூலித்தொழிலாளியாக அதே பகுதியை சேர்ந்த அன்பு மகன் வினோத் (28) என்பவர் வேலை செய்து வந்துள்ளார். அப்போது ட்ரில்லிங் மெஷினில் ட்ரில்லிங் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அதில் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதனால் அலறி துடித்து கீழே விழுந்துள்ளார். இதனை அறிந்த சக பணியாளர்கள் அச்சமடைந்து உடனடியாக மின்சாரத்தை துண்டித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூலி தொழிலாளி பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!