தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 31 ஏக்கர் நிலத்தை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மீட்ட வருவாய்த்துறையினர் சிறை துறையிடம் ஒப்படைத்தனர்.
தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரத்தில் திறந்த வெளி சிறைச்சாலைக்கான 31 ஏக்கர் புஞ்சை தரிசு நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்து மிக பெரிய அளவில் கட்டடங்கள் கட்டி வகுப்புகள் நடத்தி வந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 09ம் தேதி சாஸ்திரா பல்கலைக்கழகத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை வருவாய்த்துறை மீட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதை அடுத்து இன்று வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை ஆக்ரமிப்பு நிலத்த அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதனை அடுத்து தஞ்சை வட்டாட்சியரால் கண்காணிப்பாளர் சிறைகள் மற்றும் சீர்திருத்த துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

