Skip to content

நில விவகாரம் ..மகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சித்தப்பா.. கோவையில் பரபரப்பு

கோவை, வடவள்ளி அருகே சோமையம்பாளையம் பகுதியில் நிலத் தகராறு காரணமாக மகளை, சித்தப்பா கற்களை வீசி தாக்கிய பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.

கோவை, சோமியம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பொங்கியமாள். இவருக்கு சதீஷ்குமார் என்ற மகனும், கற்பகம் என்ற மகளும் உள்ளனர். சதீஷ் சிவில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரது தாயாருக்கு சோமையம்பாளையத்தில் 10 சென்ட் நிலத்தை அவரது உடன்பிறந்த சகோதரர் சில ஆண்டுகளுக்கு முன் எழுதி கொடுத்து உள்ளார்.

அந்த நிலத்தை பொங்கி அம்மாளின் சித்தப்பா மகனான ரங்கநாதன் ஆக்கிரமிக்க முற்பட்டதால், அதைத் தடுக்கும் வகையில் குடும்பத்தினர் கம்பி வேலி அமைக்க முடிவு செய்து உள்ளனர். அந்தப் பணியை தொடங்கிய போது, மண் கொட்டி வைக்கப்பட்டு இருந்ததால், ஜே.சி.பி கொண்டு அதை அகற்ற முயற்சி செய்தனர். அப்போது அங்கு வந்த ரங்கநாதன். ஜே.சி.பி யை நிறுத்த கூறி தகராறு ஈடுபட்டார். தட்டிக்கெட்ட கற்பகத்தையும் அவர் கற்களால் தாக்கியதுடன், தகாத வார்த்தைகளும் பேசி உள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த கற்பகம் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தாலும், போலீசார் நிலப் பிரச்சனை என்பதால் வழக்கு பதிவு செய்ய மறுக்கின்றனர் என்றும், ரங்க நாதனுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார்கள் என சதீஷ்குமார் புகார் தெரிவித்து உள்ளார்.

error: Content is protected !!