கோவை பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் பொள்ளாச்சி பல்லடம் சாலை குப்புசாமி லே-அவுட் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். கேமராக்கள், ட்ரோன் கேமரா, உள்ளிட்ட புகைப்பட வீடியோ சம்பந்தப்பட்ட கேமராக்கள் வாடகைக்கு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டுசாவியை வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். இன்று காலை வழக்கம் போல் ஜானகிராமன் கடையை திறந்து பார்த்த போது
பீரோவில் வைக்கப்பட்டிருந்த இருந்த ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த மூன்று லேப்டாப்கள் , கேமராக்கள்,
ட்ரோன் கேமராக்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜானகிராமன் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுனர்கள் கொண்டு தடயங்கள் சேகரித்தனர்.பின்னர் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை துண்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.