மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் ஒன்றை அனுப்பினார். இப்புகார் மனு பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் விசாரணைக்காக ஆஜராக வாஞ்சிநாதனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து அவர் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலைய அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.
விரைவில் திமுக உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளேன். திமுக எனக்கு ஆதரவாக எந்த ஓர் அறிக்கையையும் தற்போது வரை வெளியிடவில்லை. திமுகவினர் எனக்கு வீடு கொடுத்ததாக சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இதை நிரூபித்தால் உரியவருக்கு அந்த வீட்டைக் கொடுக்க தயாராக உள்ளேன்”
இவ்வாறு அவர் கூறினார்.