திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த அழகேசன்மற்றும் அவரது சகோதர் உமா சங்கர். இவர்கள்ப2 பேரும்கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்த சம்பவத்தில் உமா சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அழகேசன் படுக்காயத்துடன் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். படுகாயம் அடைந்த அழகேசன் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தாக்கி கொலை செய்ய முயற்சித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்க பட்டியல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் திருச்சிராப்பள்ளி செயலாளர் சி முத்துமாரி வரவேற்றார்.
இதில் பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார் துணைத்தலைவர் வடிவேல் சாமி மற்றும் குற்றவியல் வக்கீல்கள் சங்க தலைவர் முல்லைசுரேஷ், துணை தலைவர்கள் வரகனேரி சசிகுமார் பிரபு பொருளாளர் கிஷோர் குமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதேவி, சித்ரா எழிலரசி மற்றும் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்புஅளிக்க வேண்டும்.வழக்கறிஞர் அழகேசன் மீது தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.