Skip to content

மாவட்ட காவல் துறையை கண்டித்து வழக்கறிஞர் தொடர் உண்ணா நிலை போராட்டம்.

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞரும் நாம் மக்கள் இயக்க தலைவருமான சங்கமித்திறன் மூன்று அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக முன்பு தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் அவரை பல்வேறு வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

சமீபத்தில் வழக்கு ஒன்றில் பாலியல் வழக்குத் தொடர்பான குற்றவாளிகளை தப்பவிட்ட மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் ஆகியோரைக் கண்டித்தும். விதிகளுக்கு புறம்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாடுதுறை அரசு வழக்கறிஞரை நீக்க வேண்டும். பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்ததால் திட்டமிட்டுவழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை காவல் கண்டித்தும் தொடர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!