புதுக்கோட்டை டிச 02- ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டத்தைக் கண்டித்து டிசம்பர் 8 அன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விசிக கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், விசிக மாவட்டச் செயலாளர் கரு.வெள்ளைநெஞ்சன், சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் சி.ரெங்கசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், சு.மதியழகன், கி.ஜெயபாலன், சிபிஐ நகரச் செயலாளர் எம்.பி.நாடிமுத்து, விசிக சார்பில் விடுதலைவளவன், முருகேசன், அண்ணாத்துரை, சிபிஐ(எம்எல்) சார்பில் ஜோதிவேல், காத்த்திக்கேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டத்தைக் கண்டித்து டிசம்பர் 8 அன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகாமானோரை பங்கேற்கச் செய்வது என்றும். இதுகுறித்து அனைத்து ஒன்றியங்கள் மற்றும் நகரங்களில் தீவிரமாக மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை நடத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

