Skip to content

கோவையில் பல்வேறு இடங்களில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் கோவையில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்களையும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்கின்றனர். குழுவின் தலைவர் காந்தி ராஜன் தலைமையில், உறுப்பினர்கள் பி ஆர் ஜி அருண்குமார், ராமகருமாணிக்கம், சின்னதுரை,
சேவூர் ராமச்சந்திரன் அடங்கிய குழுவினர் கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை ஆய்வு செய்தனர். அதனையடுத்து காந்திபுரம் பகுதியில் உள்ள சிறைச்சாலை கைதிகள் பணிபுரியும் பெட்ரோல் பங்க்கிற்கும் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர்கள் அங்கு பணிபுரியும் கைதிகளிடம் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.

அதனை அடுத்து கோவை மத்திய சிறை, மருதமலை கோவில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் குழுவினர் ஆய்வுகள் மேற்கொண்டு இன்று மாலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் மேற்கொள்கின்றனர்.

error: Content is protected !!