நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் நாளை தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட உள்ளது. திருச்சி திருவெறும்பூரில் உள்ள சாந்தி திரையரங்கில் திரையிடப்படவில்லை. இதற்கு காரணம் லியோ திரைப்படத்தின் வசூல் தொகையில் 85 சதவீதத்தை திரையரங்க உரிமையாளர்கள் விநியோகஸ்தர்களுக்கு கொடுக்க வேண்டும் எனதிரையரங்க உரிமையாளர்களை நிர்பந்தித்ததால் சில திரையரங்க உரிமையாளர்கள் திரைப்படத்தை வாங்கவில்லை என கூறப்படுகிறது. இந்த பிரச்னையால், திருவெறும்பூர் சாந்தி திரையரங்க உரிமையாளர் பாலமுருகன் லியோ படத்தை திரையிட வில்லை எனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் ரசிகர்கள் திரையரங்கிற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

