Skip to content

“கோட்சே வாரிசுகளுக்குப் பாடம் புகட்டுவோம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், காந்தியின் கொள்கைகளையும் அவரைப் படுகொலை செய்த சித்தாந்தத்தையும் ஒப்பிட்டுத் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி, ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நீங்கா இடம் பிடித்து நிலைத்து வாழ்வார். மகாத்மாவின் புகழை மறைக்கவும், நாட்டைச் சீரழிக்கவும் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்கு வரும் காலங்களில் தக்க பாடம் புகட்டுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காந்தியடிகள் பிறந்த இந்த மண்ணின் மதச்சார்பற்ற தன்மையையும், அமைதியையும் காத்திட அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும், கோட்சேவின் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களிடமிருந்து தேசத்தைக் காப்பதே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றும் முதல்வர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!