கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
200க்கும் மேற்பட்ட எல்ஐசி முகவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில்,முகவர்க்கு வழங்கப்பட்ட புதிய கமிஷனில் இருந்து விலக்கு அளித்து – பழைய கமிஷனை வழங்க வேண்டும்,

முகவர்களுக்கான குழு காப்பீட்டுத் தொகையை 15 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு, தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.மேலும் கடந்த கூட்டத்தொடரில் அந்நிய முதலீட்டை 100% உயர்த்திய மத்திய அரசு அதை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வே தீர்மானங்கள் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் முகவர்கள் சங்க பொது குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

