குதிரை சவாரி, குதிரை இனம் சார்ந்த விலங்குகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில்; குதிரை, கழுதைகளை பயன்படுத்துபவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிமம் பெற வேண்டும். அதிக எடைகளை ஏற்றினால் உடனடியாக குதிரை, கழுதை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும். மகிழ்ச்சியான குதிரை சவாரி, திருமணத்துக்காக பொருட்களை சுமப்பதற்காக பயன்படுத்துவது குறித்து தெளிவாக குறிப்பிட்டு உரிமம் பெற வேண்டும்.
குதிரை வளர்க்கும் நிறுவனங்களும் குதிரையை வைத்திருப்பவர்களும் குதிரையையும் தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். குதிரை உரிமையாளர்கள், நிறுவனங்கள் மீது வழக்கு எதுவும் இருக்க கூடாது. குதிரைகள் முறையாக பராமரிக்கப்படாவிட்டால் பயன்படுத்த தடை விதிக்கப்படும். விலங்கு வதை தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

