திருச்சி மணப்பாறை பகுதியைச் சார்ந்த ஆதவன் கலைக்கல்லூரியில் B.COM இறுதி ஆண்டு மாணவி சங்கீதா. அதே பகுதியை சார்ந்த
சார்ந்த செல்லத்துரை மகன் சேது (22) என்பவரும் நண்பர்களாக பழகி வந்ததாகவும் நாளடைவில் காதலர்களாக மாறியதாக தெரிகிறது. காதலிக்கின்ற விபரம் வீட்டில் உள்ள பெற்றோருக்கு தெரிய வந்ததாலும் நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகங்களை சார்ந்தவர்கள்
என்பதாலும் பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி 06.09.2025 தேதியில் காங்கேயம் பகுதியில் திருமணம் செய்து கொண்டதாகவும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால்
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் பெற்றோர்கள் என்னையும் எனது கணவரையும் கொன்று விடுவார்களோ என்கின்ற அச்சம் உள்ளதாக கூறி பெற்றோர்களை அழைத்து பேசி அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்குமாறும்,எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
