திருச்சி மாவட்டம் முசிறி பரிசல்துறை ரோட்டில் அமைந்துள்ள கன்னிமார் காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
முன்னதாக சுவாமிகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தை தொடர்ந்து திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். அப்போது மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மாணவ மாணவிகள் கல்வியில் நன்கு சிறந்து விளங்கவும், தொழில் வளம் மேம்படவும் பிரார்த்தனை செய்தனர்.அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது,
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது . இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
