மதுபான கடை ஊழியர்களின் போராட்டத்தையடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் 145 மதுபான கடைகளும் திறக்கவில்லை. இதனால் மது பிரியர்கள் ஏமாற்றம். காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அலுவலகத்தில் பொது மேலாளிடம் மதுபான கடை ஊழியர்கள் காலை முதல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார். இதனால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 145 மதுபான கடைகளும் மணி 12 ஆன பிறகும் திறக்கவில்லை. இதனால் மது வாங்க வந்த மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
தஞ்சையில் 145 மதுபான கடைகள் திறக்காததால்…. மது பிரியர்கள் ஏமாற்றம்..
- by Authour
