Skip to content

மது ஊழல் வழக்கு.. கெஜ்ரிவால் விடுதலை-கதறி அழுதார்

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி வகுத்த புதிய மதுபான கொள்கையில் சதி திட்டம் அல்லது குற்றவியல் நோக்கம் இல்லை என கூறி மாஜி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ஊழல் நடந்ததாகச் சொல்லி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் காரணமாகவே கெஜ்ரிவால் தேர்தல் காலத்தில் பிரச்சாரத்திற்குக் கூட செல்ல முடியாமல் கைதும் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். உச்ச நீதிமன்றம் இதில் தலையிட வேண்டி இருந்தது.

இதற்கிடையே முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி நீதிமன்றம் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. “இந்த கலால் கொள்கையில் எந்தவொரு சதித்திட்டமோ அல்லது குற்றவியல் நோக்கமோ இல்லை,” என்று நீதிமன்றம் தெரிவித்தது. ஆம் ஆத்மி அரசு 2021-22ல் அறிமுகப்படுத்திய இந்தக் கொள்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!