தஞ்சாவூர் அருகே மனோஜிப்பட்டி அய்யன் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). சரக்கு வேன் டிரைவர். இவரது மனைவி நந்தினி. ஆறுமுகம் குடும்பத் தேவைக்காக கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடன் நெருக்கடியால் ஆறுமுகம் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மனைவி இல்லாத போது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆறுமுகத்தின் மனைவி நந்தினி கொடுத்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.