Skip to content

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

  • by Authour

திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசிதி பெற்றதாகும். அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்வான மகா தீபதிருவிழா நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பக்தர்கள் நாளை மலையேறவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!