Skip to content

லண்டன் ஓவல் டெஸ்ட்: 35 ரன்னா, 4 விக்கெட்டா?

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் தொடர்கள் ஆட சென்றது. அங்கு ஏற்கனவே நடந்து முடிந்த 4 டெஸ்ட்களில் 2 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்தியா ஒரு போட்டியில் வென்றது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் 5வது டெஸ்ட்  லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி224 ரன்களில் சுருண்டது. அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து 274 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது.  2வது இன்னிங்சில் இந்தியா396 ரன்கள் குவித்தது. எனவே  2வது இன்னிங்சில் இங்கிலாந்து 374 ரன்கள் சேர்த்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில்  2வது இன்னிங்சை தொடங்கியது.

4ம் நாளான நேற்று  ஆட்ட நேரத்தில் மழை குறுக்கிட்டதால் சீக்கரமாக முடித்துக்கொள்ளப்பட்டது.  எனவே ஆட்டம் 5ம் நாள் வரை சென்று உள்ளது. நேற்று ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து  6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது.

இந்த நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.  இங்கிலாந்து வெற்றி பெற  இன்னும் 35 ரன்கள் மட்டுமே தேவை.  கையில் 4 விக்கெட் உள்ளது.  ஒரு நாள் முழுவதும் நேரம் உள்ளது. எனவே இங்கிலாந்து வெற்றி பெற 99 சதவீத வாய்ப்பு உள்ளது.  35 ரன்கள் எடுக்கும் முன் 4 விக்கெட்டுகளையும் சாய்த்து விட்டால் இந்தியா வெற்றி பெறும்.

4 விக்கெட்டா, 35 ரன்னா என்ற நிலையில் இன்று இறுதிநாள் போட்டி  மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது . போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் ரிசல்ட் தெரிந்து விடும்.  லண்டனில் இன்றும் மழை பெய்யும் என வானிலை அறிக்கை கூறுகிறது.

error: Content is protected !!