இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, அங்கு 5 டெஸ்ட் தொடர்களில் ஆடுகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 3 வது நடைபெற்று வந்தது.
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களும், இந்தியா 387 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டத்தில் 62.1 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40. பென் ஸ்டோக்ஸ் 33, ஹாரி புரூக் 23 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
30 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை கிறிஸ் வோக்ஸ் பிரித்தார். நித்திஷ் குமார் ரெட்டி 53 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 13 ரன்கள் சேர்த்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 39.3 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. கைவசம் 2 விக்கெட்கள் மட்டுமே இருக்க வெற்றிக்கு
மேலும் 81 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜடேஜா, பும்ராவுடன் இணைந்து போராடினார். 9-வது விக்கெட்டுக்கு 35 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.
பும்ரா 54 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தை மிட் ஆன் திசையில் தூக்கி அடித்தபோது பதிலி வீரர் குக்கிடம் கேட்ச் கொடுத்தார். அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 46 ரன்கள் தேவையாக இருந்தது.
ஆனாலும் ஜடேஜாவும், முகமது சிராஜும் பொறுமையாக விளையாடி ஆட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்திக்கொண்டிருந்தனர். முகமது சிராஜ் 30 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஷோயப் பஷிர் பந்தை தடுப்பாட்டம் மேற்கொண்ட போது போல்டானார். இதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
பந்தை தடுத்த சிராஜ் அந்த பந்து எங்கே செல்கிறது என்பதை கூட கவனிக்காமல் எதை பார்த்துக்கொண்டிருந்தாரோ தெரியவந்து. ஸ்டம்ப் அருகே விழுந்த பந்து மெதுவாக நகர்ந்து ஸ்டம்பை தொட்டது. இதனால் சிராஜ் ஆட்டமிழந்தார். ஒட்டு மொத்த இந்திய அணியில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். நேற்றை தோல்விக்குஇந்த கவனக்குறைவே காரணம்.
அதுவரை ஜடேஜா பொறுமையாகவும், அதே நேரத்தில் நம்பிக்கையுடனும் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொண்டார். அவரது ஆட்டம் இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. வெற்றியை இந்தியாவுக்கு தந்து விடுவார் என எதிர்பார்த்தனர். அவர் 181 பந்துகளை சந்தித்து 61 ரன்களுடன் களத்தில் நின்றார். அதில் ஒரு சிக்சர், 4 பவுண்டர்களும் அடங்கும்.
வழக்கமாக சிராஜ் இரண்டு, மூன்று பந்துகளுக்கு மேல் களத்தில் நின்றமாட்டார். ஆனால் நேற்று அவர் 30 பந்துகளை சந்தித்தார். எனவே அவர் சமாளிப்பார் என எதிர்பார்த்த நேரத்தில் கோட்டை விட்டு விட்டார். 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். முன்னதாக பும்ரா 54 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் எடுத்திருந்தார். அவரும் கோட்டை விட்டு விட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 2-1 என்ற புள்ளிகணக்கில் முன்னணியில உள்ளது.இன்னும் 2 போட்டிகள் உள்ளன. 4வது போட்டி வரும் 23ம் தேதி மான்செஸ்டரில் நடக்கிறது.