ராஜஸ்தான் மாநிலம் ஜபல்பூர் நகரில் இருந்து உஜ்ஜைன் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் ஒரு பெண் உட்பட மொத்தம் 5 பேர் பயணம் செய்துள்ளனர். திகாதியா நகர் அருகே கார் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சரக்கு லாரி ஒன்றின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து காவல் உதவி ஆய்வாளர் ஜெய் சிங் கூறுகையில், “காரில் பயணித்த ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் என 4 பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு நபர் மீட்கப்பட்டு, சாக்சு நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்,” எனத் தெரிவித்தார்.
விசாரணையில், விபத்துக்குள்ளான கார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான பதிவு எண்ணைக் கொண்டது என்பது தெரியவந்துள்ளது. கார் பதிவு எண்ணைக் கொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

