Skip to content

​தொழில் நஷ்டம்… திருச்சியில் மருந்து வணிகர் தற்கொலை…போலீஸ் விசாரணை

திருச்சி கண்டோன்மெண்ட், ஒத்தக்கடை பொதுத்தேர்வு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (43). இவர் கடந்த ஜனவரி மாதம் மருந்து மொத்த விற்பனைத் தொழிலைத் தொடங்கினார். இதற்காக மெடிக்கல் கடை உரிமையாளர் ஒருவரிடம் சுமார் ரூ. 2 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார்.தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் ராஜேஷ் குமார் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவர், உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில் தெருவில் உள்ள தனது அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த உறையூர் காவல்துறையினர், ராஜேஷ் குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி நீலா அளித்த புகாரின் பேரில், உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!