தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அல்சகுடி பகுதியை சேர்ந்தவர் விவேக் (24). இவருக்கும் திருமணமான பெண்ணிற்கும் தகாத உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் விவேக்கை அரிவளால் வெட்ட வந்துள்ளார். அப்போது விவேக்கின் தந்தை மூர்த்தி தடுக்க சென்ற போது அவர் மீது வெட்டு விழுந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே மூர்த்தி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

