Skip to content

குறைவான போனஸ்…டோல்கேட்டை இலவசமாக திறந்துவிட்ட ஊழியர்கள்

அரியானா மாநிலத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பதேஹாபாத் சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு போதிய தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு ரூ.1,100 மட்டுமே போனஸ் வழங்கப்பட்டதாகக் தெரிகிறது.

இதனால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேட்டை மூடாமல் திறந்து விட்டுள்ளனர். கேட்டை மூடினால், வாகனம் அதன்முன் வந்து நிற்கும். பாஸ்டாக் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும். அதன்பின் கேட் திறக்கப்படும்.

இந்தநிலையில், போனஸ் வழங்காத கோபத்தில் ஊழியர்கள் கேட்டை திறந்து விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19-ம் தேதி) இரவு முதல் காலை வரை ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் கடந்து சென்றுள்ளன. இதனால் மத்திய அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!