கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோனார்யூர் ஊரில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு
14மந்தை சார்பில் இன்று மாடு மாலை தாண்டு விழா விமர்சையாக நடைபெற்றது.
இதில்,
கோனா தாதா நாயக்கர் மந்தை
உள்ளிட்ட 14 மந்தையைச் சேர்ந்த கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான நாயக்கர் சமூகத்தினர் வேன் மற்றும் லாரிகளில் வீட்டில் வளர்த்து வரும் காளைகளை திடலுக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் கோவில் முன்பு
மேள தாளங்கள் முழங்க சந்தனம் கொடுத்து விழா குழுவினர் அவர்களை வரவேற்றனர்.
பின்னர் மாடு மாலை தாண்டு விழா நடைபெற்றது.
இதில் 200க்கு. மேற்ப்பட்ட எருது மாடுகள் கலந்து கொண்டன.
சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எல்லையில் இருந்து,
எருது மாடுகளை இளைஞர்கள் விரட்டி வந்தனர்.
முதலில் வந்த எருதுக்கு
எலுமிச்சை பழம் மற்றும் சந்தனம் வழங்கப்பட்டது.
இதில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்