தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், மழை காரணமாக மதுரையில் சுவர் இடிந்து மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். வலையன்குளம் கிராமத்தில் வீட்டின் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்தது. வெங்கட்டி என்ற பெண்(55), வீரமணி(10), வீரமணியின் பாட்டி அம்மா பிள்ளை(65) ஆகியோர் உயிரிழந்தனர். வீட்டின் சுவரில் பாதிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்திருப்பது தெரியவந்துள்ளது.