மதுரை மாநகராட்சி மேயராக இருப்பவர் இந்திராணி. திமுகவை சேர்ந்தவர். இந்த மாநகராட்சி யில் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா ஆகியோர் மண்டல தலைவர்களாக உள்ளனர். நிலைக்குழு தலைவர்களாக இருந்தவர்கள் மூவேந்திரன், விஜயலட்சுமி. இவர்களும் திமுகவை சேர்ந்தவர்கள். இவர்கள் மீது வரிவிதிப்பு முறைகேடு புகார்கள் கூறப்பட்டன. எனவே உடனடியாக பதவியை ராஜினாமா செய்யும்படி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி இவர்கள் ராஜினாமா செய்தனர். ராஜினாமாக்களை மேயர் ஏற்றுக்கொண்டார். அதே நேரத்தில் அவர்கள் கவுன்சிலர்களாக தொடர்வார்கள்.
இந்த புகார் தொடர்பாக ஏற்கனவே மாநகராட்சி பில் கலெக்டர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.