Skip to content

பராமரிப்பு பணி: பதிவுத்துறை இணையதளம் முடக்கம் – முன்னெச்சரிக்கை அறிவிப்பு

தமிழகப் பத்திரப் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதிவுத்துறையின் இணையதளம் பராமரிப்புப் பணிகள் மற்றும் ‘ஸ்டார் 3.0’ திட்ட மேம்பாட்டுப் பணிகளுக்காகத் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (புதன்கிழமை) இரவு 7 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி வரை [https://tnreginet. gov.in] என்ற இணையதளம் செயல்படாது. இருப்பினும், அனைத்துச் சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஆவணப் பதிவுப் பணிகள் வழக்கம் போல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (ஜனவரி 22) பத்திரம் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள், இணையதளம் செயல்படாத நேரத்தைக் கருத்தில் கொண்டு, இன்று இரவு 7 மணிக்குள் டோக்கன் பெறுதல், ஆன்லைன் கட்டணம் செலுத்துதல், வில்லங்கச் சான்று மற்றும் ஆவண நகல்களைப் பெறுதல் போன்ற சேவைகளை முன்னதாகவே முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!