2017ல் நடிகையை கடத்தில் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறிய வழக்கில் இருந்து நடிகர் திலீப் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஏ1 முதல் ஏ8 வரை 6 பேர் குற்றவாளிகள் என கேரள நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 8வது குற்றவாளியாக நடிகர திலீப் சேர்க்கப்பட்ட நிலையில் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பல்சர் சுனில் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் தீர்ப்பானது. நடிகர் திலீப்பிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில் நடிகர் திலீப் நிருபர்களிடம் கூறியதாவது…
உண்மையில் எனக்கு எதிராகத்தான் சதித்திட்டங்கள் அரங்கேறின. எனக்காக பிரார்த்தனை செய்த கோடிக்கணக்கான மக்களுக்கு நன்றி. இந்த வழக்கு மூலம் எனது வாழ்க்கையை சீரழிக்க சிலர் முயன்றார்கள். பாலியல் வழக்கில் உண்மை நிரூபணமாகியுள்ளது. எனக்காக வாதிட்ட வழக்கறிஞர்கள், ஆதரவு தெரிவித்த நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.

