ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இந்த நிலையில் இன்று மல்லை சத்யா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி ம.தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக மல்லை சத்யாவை நீக்கி வைகோ கூறிஉள்ளார். மேலும் ம.தி.மு.க. உடமைகள், ஏடுகள் அனைத்தையும் ஒப்படைக்கக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ம.தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யா கூறுகையில், தன் மீது அபாண்ட குற்றச்சாட்டுகளை சுமத்திய துரை வைகோ மீது நடவடிக்கை இல்லையா? என்று வினவியுள்ளார்.