Skip to content

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைத்து ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு மோப்ப நாயுடன் சென்ற போலீசாரும், வெடிகுண்டு செயழிலப்பு நிபுணர்களும் சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. மிரட்டல் வந்தது புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில்,விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெயர் முகமது சபிக் என தெரியவந்துள்ளது.
அதுபோன்று இன்று மதுரை விமான நிலையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!