Skip to content

அதிக லாப ஆசைகாட்டி பண மோசடி செய்த நபர் கைது

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் வசிக்கும் பார்த்திபன் (வயது 30) த/பெ ஜெய்சங்கர் என்பவரிடம் இணைய வழியில் Matrimonial website-ல் profile-ஐ பார்த்து வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் போல் நடித்து பழகிய நபர், வர்த்தக வாயிலாக அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூபாய் 17,50,000-னை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்து ஏமாற்றி உள்ளார்.
இது குறித்து பார்த்திபன் அரியலூர் மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், காவல் ஆய்வாளர் இசைவாணி வழக்கு பதிவு செய்தார். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் செல்வன் வழிகாட்டுதலின்படி, இணைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இசைவாணி தலைமையில் அமைக்கப்பட்ட போலீசார், கன்னியாகுமரி மாவட்டம் காட்டாதுறை, கல்குளத்தைச்
சேர்ந்த அசார் (வயது 36) த/பெ முகமது அலி, என்பவரை கைது செய்தனர்.
இவரிடமிருந்து, செல்போன்-02, சிம் காடுகள்-03, வங்கிக் கணக்குப் புத்தகம்-01, ATM Card-01, digital signature pen drive-1 மற்றும் ரொக்கம் ரூ.2700/-ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சக குற்றவாளிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!