Skip to content

எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரக் கூட்டம்… மயங்கி விழுந்தவர் சாவு…

ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான அர்ஜுனன், பிரச்சார கூட்டத்திற்கு இடையே நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!