கடந்த 2023 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம் இலந்தைக்கூடம் கிராமத்தைச் சேர்ந்த ஆசை தம்பி (வயது 60) த/பெ சுப்பிரமணி என்பவர் பத்து வயது சிறுமியிடம் பாலியல் வன்தாக்குதல் செய்ய முயற்சி செய்து உள்ளார். மேலும் ஆபாசமாக திட்டி இதை வெளியே யாரிடமும் சொன்னால் கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு சாட்சிகளையும் விசாரித்த நீதிமன்றம் குற்றவாளி ஆசைத்தம்பிக்கு 17 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 16,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு பாதிக்கப்பட்டோர் நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டது. இதனையடுத்து குற்றவாளி ஆசைத்தம்பியை காவல்துறையினரால் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.