Skip to content

மான்செஸ்டர் 4வது டெஸ்டில் இந்தியா பேட்டிங்

ஆண்டர்சன்- சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட்  அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில்4-வது டெஸ்ட் போட்டியில்  இன்று இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகிறது. மான்செஸ்டரில் இந்த போட்டி நடக்கிறது.

கடந்த 35 ஆண்டுகளில் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் விளையாடி உள்ளது. கடந்த 2021 சுற்றுப்பயணத்தில் 5-வது போட்டி இந்த மைதானத்தில் நடைபெற இருந்தது. கரோனா பரவல் காரணம் அந்தப் போட்டியின் அட்டவணை மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதானல் அந்த போட்டி 12 மாதங்களுக்கு பிறகு பர்மிங்காமில் நடைபெற்றது.

கடைசியாக கடந்த 2014-ல் டோனி  தலைமையிலான இந்திய அணி இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதில் இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த மைதானத்தில்தான் டோனி  கடைசியாக தனது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் அவர் ஓய்வு பெற்றார். 2019 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை நியூஸிலாந்து அணி இங்குதான் வீழ்த்தியது.டோனிக்கு அதுதான் கடைசி சர்வதேச போட்டி.

கடந்த 1990-ல் இந்த மைதானத்தில்தான் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். தனது அபார ஆட்டத்தின் மூலம் அந்தப் போட்டியை சச்சின் டிரா செய்திருந்தார்.எனவே இந்த மைதானத்தில் இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்யுமா  என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 4வது டெஸ்ட்டுக்கான  டாஸ் போடப்பட்டது. இதில்  இங்கிலாந்து  வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. எனவே இந்தியா முதலல் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. வழக்கம் போல ஜெய்ஸ்வால்,  ராகுல் களம் இறநங்கினர்.

 

 

 

 

error: Content is protected !!