Skip to content

மணிப்பூர் மாநில அரசை கண்டித்து கரூரில் 300-க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

கரூர் மாநகர் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே கரூர் சிறுபான்மையினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் தொடர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து,

மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள் படுகொலை மற்றும் பெண்களும் பாதுகாப்பு இன்மை கண்டித்து தொடர் கலவரத்தை தடுத்து நிறுத்த கோரியும் மத்திய அரசை கண்டித்தும்,தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையை தடுக்க தவறிய மணிப்பூர் மாநில அரசு கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட சிறுபான்மையினர் 300-க்கு மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு மத்திய மோடி ஆட்சியை கண்டித்தும், மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும் கையில் பதாகையை ஏந்தி கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!