கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட திரைப்படம் உருவாகிறது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனித்துவமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு இப்போது கோடம்பாக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பண்ணையாரும் பத்மினியும் மற்றும் ‘சேதுபதி’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீண்டும் இணைகிறார்.
நடிகர் விஜய் சேதுபதிக்கு மிக முக்கியமான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சு. அருண்குமார். கிராமியப் பின்னணியில் உருவான ‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ஆக்ஷன் கலந்த காவல்துறை கதையான ‘சேதுபதி’ ஆகிய இரு படங்களும் இந்தச் கூட்டணியின் முக்கியமான பங்களிப்புகளாகும்.
இதனை தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவதால், இந்தப் புதிய திரைப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படம் எந்தக் கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்பது குறித்த சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.

