கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை கூரைநாடு பகுதியில் இருந்து அமைதி பேரணி துவங்கியது. திமுக மாவட்ட செயலாளரும் , எம்எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தனர். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் மெழுகுவர்த்தி ஏற்றி கருணாநிதி நினைவு தினத்தை அனுஷ்டித்தனர். மூத்த நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க அலுவலகத்தில், கருணாநிதியின் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திற்கு,சட்டமன்ற உறுப்பினரும்,ஒன்றிய திமுக செயலாளருமான க.சொ.க. கண்ணன் மாலை அனுவித்து, மலரஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கினார்.
இந்நிகழ்வில், பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் இரா.அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.ராமதுரை, அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ், பொருளாளர் த.நாகராஜன்,ஒன்றிய துணை செயலாளர்கள் க.சாமிதுரை,இந்துமதி நடராஜன், ராஜேந்திரன்,மாவட்ட பிரதிநிதிகள்,கோவி.சீனிவாசன், சி.கண்ணதாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் கே.எஸ்.ஆர்.கார்த்திக்கேயன், ந.கார்த்திகைகுமரன்,
சம்பந்தம், த.குணசீலன்,முனைவர் முருகானந்தம், க.நளராசன், மருத்துவர் மா.சங்கர், எழிலரசி அர்ச்சுனன், தா.பழூர் நகர செயலாளர் கண்ணன் மற்றும்
உள்ளாட்சி பிரதிநிதிகள்,கிளைக் கழக செயலாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
