Skip to content

மயிலாடுதுறை- 3 குற்றவாளிகள் குண்டாசில் சிறையில் அடைப்பு

மயிலாடுதுறை காவேரி ஆற்றுப்பாலம் அருகே மே 24-ஆம் தேதி ஆசிப்(20) என்பவரை கத்தியால் வெட்டி க் கொல்ல முயன்ற வழக்கில் கலைஞர் நகரைச் சேர்ந்த ஹரிஹரன்(எ)ஹரிஸ்(23), பிரித்திவிராஜ்(30), அருண்மொழித்தேவன் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்(29) ஆகிய 3 பேரையும் மயிலாடுதுறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மூவர் மீதும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குத்துவாளியில் ஆவார்கள். இந்நிலையில், இவர்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவுபடி 3 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
error: Content is protected !!