Skip to content

மயிலாடுதுறை-எரிவாயு கம்பரசர் வெடித்து விபத்து… உரிமையாளர் தலை சிதைந்து பலி

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் ஏசி பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் கடை உள்ளது. இந்த கடையில் உரிமையாளர் பாலாஜி மற்றும் தொழிலாளி கணேசன் ஆகிய இருவரும் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கேஸ் வெல்டு வைத்து பழுது நீக்கம் செய்துள்ளனர். அப்போது எரிவாயு கம்பரசர் வெடித்துள்ளது. இதில் பாலாஜி தலை சிதைந்து மூளை வெளியேறிய நிலையில் கணேசனுக்கு தலைமுடி பொசுங்கி நெஞ்சு மற்றும் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பாலாஜி உயிரிழந்தார்.
error: Content is protected !!