Skip to content

மயிலாடுதுறை… மனைவியை அடித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை….

மயிலாடுதுறையை அடுத்த வேப்பங்குளத்தை சேர்ந்த ராஜபாண்டியன். இவரது மனைவி தஞ்சையை சேர்ந்த கோடீஸ்வரி.
கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டுக்கு சென்றிருந்த கோடீஸ்வரியை 2019 ஆம் ஆண்டு அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார்.

இந்நிலையில், 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி ஏற்பட்ட சண்டையில் ராஜபாண்டியன் கோடீஸ்வரியின் தலையை சுவற்றில் மோதியதில், அவர் படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மயிலாடுதுறை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது . முடிவில் ராஜபாண்டியனை குற்றவாளி என
மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி அளித்தார். ,அவருக்கு ஆயுள் சிறை, தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும், விதித்தார்..

error: Content is protected !!