மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் இரவு வைரமுத்து என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆறு பேர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. டிஎஸ்பி பாலாஜி மேற்கொண்ட தொடர் விசாரணையை தொடர்ந்து குகன் அன்புநிதி, பாஸ்கர் ஆகிய மூன்று பேர் தவிர்த்த மற்ற மூன்று பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வைரமுத்துவின் காதலி மாலினியின் தாயார் விஜயா
மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் என்று காலை வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், விஜயாவின் மீது புதிதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு வைரமுத்துவின் உடலை பெற்றுச் சென்றனர்.